தமிழக அரசு பேருந்தை அலறவிட்ட வடமாநில இளைஞர்கள்...வாளை எடுத்து மிரட்டியதும் விழுந்த மரண அடி

x

தமிழக அரசு பேருந்தை அலறவிட்ட வடமாநில இளைஞர்கள்...வாளை எடுத்து மிரட்டியதும் மரண அடி கொடுத்து கதறவிட்ட பயணிகள்

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்து ஓட்டுநரை வடமாநில லாரி ஓட்டுநர்கள் வாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட மாநில லாரி ஓட்டுநர்களின் கையில் வாள்?.. பின்னணி என்ன?.. நடந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

நாமக்கல் அடுத்த ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகேதான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது...

கரூரில் இருந்து வடமாநிலம் நோக்கி சென்ற லாரியை, சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது...

அப்போது, லாரியின் கதவு திடீரென திறந்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை லாவகமாக இயக்கியதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது..

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி இது குறித்து தட்டிக் கேட்டிருக்கிறார்..

அப்போது, லாரிக்குள் இருந்த வட மாநில ஓட்டுநர்கள் இருவர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான வாளை எடுத்து ஓட்டுநரை தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பேருந்துக்குள் இருந்த பயணிகள், வட மாநில லாரி ஓட்டுநர்கள் இருவரையும் தாக்கி, அவர்களிடம் இருந்து வாளை பறித்திருக்கின்றனர்..

இதனிடையே, சம்பவம் அறிந்த வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்த போது, தங்களின் பாதுகாப்பிற்காக லாரியில் வாளை வைத்திருந்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில், இருவரையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்..

தேசிய நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் அரசு பேருந்து ஓட்டுநரை வட மாநில லாரி ஓட்டுநர்கள் வாளால் வெட்ட முயன்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்