ருத்ர தாண்டவம் ஆடிய குற்றால மெயின் அருவி இப்போ எப்படி இருக்கு? நேரடி காட்சிகள்
குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் குறைந்த நிலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக மெயின் அருவி பகுதியில் உள்ள கைப்பிடி கம்பிகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதுடன், பாலத்தின் தடுப்புகளும் சேதமடைந்தன. வெள்ளம் குறைந்தநிலையில் ஐந்தருவி, புலி அருவிகளில் மட்டும் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்கு நாட்களுக்கு பின்னர் இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் அடித்து சென்ற பொருட்களை கணக்கெடுத்து தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story