தமிழக சிறைகளில் முறைகேடுகள்..? நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
தமிழக சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ததில், 1 கோடியே 63 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக 22 சிறைத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 2016 முதல் 2019 வரை
சிறைகளில் நடந்த முறைகேடு குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அதிக பொது நலம் இருப்பதால், விசாரணை அதிகாரி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். முறைகேடுகள் பற்றிய விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும், வழக்கு விசாரணை முக்கிய நிலையில் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமின் வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கும் என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.