கோர்ட்டை ஏமாற்ற மனு... 400 ஏக்கர் கோவில் நிலத்தை விற்ற அதிர்ச்சி... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

புதுக்கோட்ட மாவட்டம் ஆவுடையார்கோயில், ஆத்மநாத சுவாமி கோவிலில் சிறுகால சந்ததி கட்டளைக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களை சிதம்பரம் என்பவர் அபகரித்து, விற்பனை செய்ததாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. தாமே பரம்பரை அறங்காவலர் என்று புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தை ஏமாற்றி மனு தாக்கல் செய்து உரிய தரப்பினர்களை சேர்க்காமல், 2018 இல் ஒரு உத்தரவை பெற்றதாக மனுவில் கூறப்பட்டது. அந்த உத்தரவின் பெயரில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி கட்டளையின் நிலத்தை தனது மகனுக்கும் வேறு சிலருக்கும் விற்று விட்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ்மை நீதிமன்றத்தில் சிதம்பரம் என்பவர் பொய்யான காரணத்தைச் சொல்லி, சட்டத்தை தவறாக பயன்படுத்தி மேற்படி மனு தாக்கல் செய்துள்ள விவரம் தெரியவந்துள்ளதால், புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் விற்கப்பட்ட கோவில் மற்றும் அறக்கட்டளையின் சொத்துக்களை பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்