IT, ED ரெய்டு... கதிர் ஆனந்த் MP வழக்கு... பிப்., 12 - கோர்ட் போட்ட உத்தரவு
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு தொடர்புடைய இடத்திலிருந்து 11 கோடியே 44 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பிப்ரவரி 12க்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களில், கதிர் ஆனந்த் வீடு, கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story