சிதம்பரம் அருகே வீடியோ காலில் பேசி விட்டு தம்பதி தற்கொலை - பெற்றோரை இழந்து தவிக்கும் 2 பெண் குழந்தைகள்

x

வெளிநாட்டில் கணவன் தமிழ்நாட்டில் மனைவி வீடியோ கால் பேசி முடிந்தவுடன் அடுத்தடுத்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர், நிற்கதியாக நிற்கும் 2 பெண் குழந்தைகளின், கேள்விக்குறியான குழந்தைகளின் வாழ்க்கை சிதம்பரம் அருகே அதிர்ச்சி சம்பவம்.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குளத்தகுறிச்சி பகுதி சேர்ந்த கௌரி என்பவருக்கும் திருமணம் ஆகி சுமார் 5 ஆண்டுகள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது,

இந்நிலையில் பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது,

விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கௌரியிடம் பன்னீர்செல்வம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது,

இதனால் அடிக்கடி கௌரி அவரது தாய் வீட்டிற்கு சென்று விடுவதாகவும் தெரிகிறது,

தற்போது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவன் வீட்டுக்கு வந்த கௌரி நேற்று காலையில் தங்கை அப்பாவிடம் வீடியோ கால் பேசி விட்டு பின்னர் வெளிநாட்டில் பணிபுரியும் கணவனிடம் வீடியோ கால் பேசி உள்ளார்,

பேசி முடித்த சில மணி நேரங்களில் கௌரி வீட்டில் உள்ள அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,

இதனைக் கேட்ட வெளிநாட்டில் உள்ள பன்னீர்செல்வம் அங்கே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதுச்சத்திரம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

மேலும் இது குறித்து இறந்து போன கௌரி தந்தை குறுகையில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் நாங்கள் எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவோம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு என் மகள் கணவன் வீட்டுக்கு செல்வதாக கூறி வந்தார் அவரை அநியாயமாக கொன்றுவிட்டதாகவும் தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அல்லது பார்ப்போரை கண்கலங்க வைத்தது, பின்னர் கௌரியின் தங்கை கார்த்திகா கூறுகையில் மாமாவிற்கும் அக்காவிற்கும் அப்போது சண்டை வருவது வழக்கம் ஆனால் நேற்று என்ன நடந்தது என்று தெரியவில்லை அக்கா இங்கு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாமா வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்டார் இரண்டு பெண் குழந்தையும் பாதுகாக்க ஏதாவது ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் அவர்களுக்கு உரிய இழப்பீடை தர வேண்டும் அதேபோல் வெளிநாட்டில் கம்பெனியில் பணிபுரியும் போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தைகளின் நலன் கருதி அந்த நிர்வாகமும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அவரும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்