ரயில் தண்டவாளத்தில் படுத்து உயிரை மாய்த்த ஜோடி
தேனி அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், சம்யுக்தா என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டனர். குன்னூர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த அவர்களது உடலை மீட்டு, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story