தமிழகத்தில் கொரோனா காலத்தில் வசூலித்த வாடகையை திருப்பி தர உத்தரவு - வாடகைக்கு இருப்பவர்கள் மகிழ்ச்சி

x

தமிழகத்தில் கொரோனா காலத்தில் வசூலித்த வாடகையை திருப்பி தர உத்தரவு - வாடகைக்கு இருப்பவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு சொந்தமான கடைகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் செலுத்தப்பட்ட வாடகையை திரும்ப பெற்றுக் கொள்ள வியாபாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான வாடகை கட்டணங்களை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, வசூலிக்கப்பட்ட வாடகையை மூன்று வாரங்களில் திருப்பித் தர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்