உதகை டூ குன்னூர்.. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
கோடை சீசனை முன்னிட்டு உதகை - குன்னூர் இடையே மார்ச் 28 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே உதகை - குன்னூர் இடையே நான்கு முறை ரயில் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக மேலும் ஒரு சிறப்பு மலை இரயில் இயக்கப்பட உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் குன்னூரிலிருந்து உதகைக்கு காலை 9.40 மணிக்கும், உதகையிலிருந்து குன்னூருக்கு மாலை 4.45 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story