அதானி குழும முறைகேடு..! காங்கிரஸ் எடுத்த முக்கிய முடிவு | Adani Group | Hindenburg Research
அதானி குழும முறைமுறைகள் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் தேசிய செயலாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்தும் விவாதித்ததாக முறைகேட்டில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டவர், நிதி சந்தையை ஒழுங்குப்படுத்தும் அமைப்பு சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 22 ஆம் தேதி நடத்தப்படும் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.