``அட பாவமே.. இதுக்கு 500 ரூபாயா?’’ - நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர்.. கண்கலங்கிய பெண்
கரூர் அருகே அரசு பேருந்தில் கூடுதல் லக்கேஜுக்கு 500 ரூபாய் டிக்கெட் எடுக்க மறுத்த பெண்ணை, நடத்துநர் பாதிவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷர்மிளா என்பவர், கோவையில் இருந்து திருச்சி செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அவருக்கு 155 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலித்த நடத்துநர், துணிமணிகள் இருந்த பைக்கு கூடுதல் லக்கேஜ் கட்டணமாக 500 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு ஷர்மிளா மறுத்ததால் நடத்துநரும் ஓட்டுநரும், அவரை பாதிவழியில் இறக்கிவிட்டுள்ளனர். செய்வதறியாமல் கண்ணீருடன் நின்றிருந்த அவரை, காரில் வந்த இளைஞர் ஒருவர் அழைத்து சென்று கரூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். பெண் என்றும் பாராமல் பாதிவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story