வெயிலின் வாட்டத்தால் ஒதுங்கிய பயணிகள்..விரட்டிய பணியாளர்கள்?..வெடித்த வாக்குவாதம்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லில், வெயிலுக்கு ஒதுங்கியவர்களை வண்ண மீன் காட்சியக பணியாளர்கள் விரட்டியதாக புகார் எழுந்துள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல்லிலும் வெயில் வாட்டுவதால், சுற்றுலா பயணிகளை வண்ணமீன் காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் அழைத்து வந்தனர். அப்போது சிலர் நிழலுக்காக அங்கேயே ஒதுங்கியுள்ளனர். ஆனால் அவர்களையும் டிக்கெட் எடுக்க வலியுறுத்தி, அங்கிருந்த பணியாளர்கள் விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Next Story
