"நாய விட கேவலமா நடத்துறாங்க.. கவர்மென்ட் ஹாஸ்பிடல நான் நம்பல'' -பறிகொடுத்து கதறும் தந்தை

x

மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக புகார்

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளன

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஜெயசித்ரா என்ற பெண் கடந்த 4-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குழந்தை பிறந்து 3 நாட்களில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்