செய்ய கூடாததை செய்த கல்லூரி மாணவன்.. டாய்லெட்டில் அகால மரணம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த தனியார் பார்மசி கல்லூரி மாணவர் போதை ஊசி செலுத்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கழிவறையில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்த சந்தன கோபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கழிவறையில் கிடந்த ஊசி, 2 வகையான வலி நிவாரண மருந்துகளை கைப்பற்றிய நல்லிபாளையம் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story