காச்சாமூச்சா வலை மீனவர்களிடையே மூண்ட மோதல்.. பரபரத்த கலெக்டர் ஆபிஸ்

x

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே மீன்பிடி வலை பயன்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேங்காப்பட்டணம் அருகே அமைந்துள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் ஒரு பகுதியினர், அரசால் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட காச்சாமூச்சா வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலைகளையும் பயன்படுத்துவதால் ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பு எனக் கூறி ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பு மீனவர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் துறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்றனர். இரு தரப்பிலிருந்தும் அதிகமான மீனவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றதால், இப்பிரச்சனை தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் தனியாக கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத இரு தரப்பு மீனவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்