கேஸ் பங்க்கில் விபரீதம்... பற்றியெரிந்த கார்... நூல் தப்பினாலும்... வெளியான திக் திக் காட்சி

x

கோவை உக்கடம் பகுதியில் கேஸ் நிரப்ப வந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. எல்.பி.ஜி கேஸ் பங்கில், கேஸ் நிரப்புவதற்காக ஜாபர் சாதிக் என்பவர் ஆம்னி காரை ஓட்டி வந்த போது, திடீரென தீப்பற்றியது. உடனடியாக பங்க் ஓரமாக காரை நிறுத்தப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் கார் முழுவதும் மளமளவென தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்