ஊர் பூரா சிசிடிவி... டெக்னாலஜியில் `இஸ்ரேல்' லெவல்.. எல்லாமே Automatic..! குடிநீருக்கு கூட தொழில்நுட்பம்... தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா..? ஒரே க்ளிக்... ஓஹோன்னு மாற்றிய சுயேட்சைகள்...

x

கோவையில் சுயேட்சைகள் வசமுள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சியில், ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் விதிவிலக்காக அரசியல் கட்சிகள் அல்லாமல் முழுக்க சுயேட்சைகளை முன்னிறுத்தி ஒரு புதிய அரசியல் மாடலை கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல்படுத்தி வருகிறது.

கார்ப்ரேட் நிறுவனம் போல் காட்சியளிக்கும் இந்த பேரூராட்சி அலுவலகத்தில், பல வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டே வருகின்றன. ஏற்கனவே சிசிடிவி சேவை, பசுமை வனங்கள் என அடிப்படை வசதிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அசத்தி வருகின்றனர்..

அதிலும் தொழில்நுட்ப உதவியுடன், செயலி மூலமே நீர் இருப்பு, நீர் ஏற்றம், நீர் வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் செயலி வடிவமைத்து செயல்படுத்தி வருவது தான் தரமான சம்பவம்..

இந்த திட்டம் மூலம், குடிநீர் விநியோகம் சீராக இருப்பதோடு, இதன் வாயிலாக 4 லட்சம் ரூபாய் வரையிலான நிதியை சேமிக்க முடிகிறது என பெருமிதத்துடன் கூறுகிறார் பேரூராட்சித் தலைவர் சசிகுமார்.

20 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த பேரூராட்சியில், குடிநீர் விநியோகத்தை எளிதாக நிர்வகிக்க மேற்கொண்ட முயற்சி பலருக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.

அதே வேளையில், இத்திட்டத்தை அமல்படுத்திய பேரூராட்சி உறுப்பினர்களை பாராட்டி வருகின்றனர் அப்பகுதி மக்கள்..


Next Story

மேலும் செய்திகள்