கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பகீர் சம்பவம்... தீயாய் சுற்றும் பிலடி பெக்கர் வீடியோ

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலையில் யாசகம் கேட்பது போல நடித்து, மருந்தகத்திற்குள் நுழைந்து கைவரிசைய காட்டிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மீனாட்சி பேருந்து நிலையம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 23 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் ஏற்கனவே கொள்ளையில் ஈடுபட்ட நபர் மீண்டும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அதன்படி வழக்குபதிந்துள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்