தமிழகத்தையே பரபரப்பாக்கிய `கல்யாண ஆசை ராணி’ - லிஸ்ட கேட்டாலே தலை சுத்துதே!

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயம் செய்து வரும் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனி இணையதளம் மூலம் பெண் தேடி வந்து இருக்கிறார். அப்போது அதே இணையதளம் மூலமாக மாப்பிள்ளை தேடி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ப்ரியா என்ற பெண் அறிமுகம் ஆகி இருக்கிறார். தொடர்ந்து இருவரும் போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பேசி வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் ப்ரியா தனது அக்காவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் அதற்குச் சிகிச்சை அளிக்கப் பணம் தேவைப்படுவதாகக் கூறி இருக்கிறார். இதனை நம்பிய இளைஞர் பல்வேறு தவணைகள் மூலமாக சுமார் 7 லட்சம் வரை பிரியாவிற்கு கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பிரியாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த இளைஞர் நாமக்கல் மாவட்டத்தில் பிரியா கூறிய முகவரிக்குச் சென்ற போது அங்கு அப்படி யாருமே இல்லாதது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்