''கெஞ்சி கெஞ்சி கேட்க வேண்டியதா இருக்கு கேவலமா இருக்கு'' - கோவை மக்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

கோயமுத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் கொங்கு உணவு திருவிழா 2 நாட்களாக நடைபெற்றது. சனிக்கிழமை அன்று நடைபெற்ற உணவு திருவிழாவில் பெரியவர்களுக்கு 799 ரூபாய், குழந்தைகளுக்கு 499 ரூபாய் என டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டு அன்லிமிடெட் சாப்பாடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்து ஆயிரக்கணக்கான மக்கள் உணவு திருவிழாவிற்கு சென்ற நிலையில், பலருக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எந்த உணவு கேட்டாலும் இல்லை என்று கூறியதாகவும், கெஞ்சி கெஞ்சி கேட்டால் மட்டுமே உணவு தந்ததாகவும் வாடிக்கையாளர்கள் ஆதங்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்