கடனை வசூலிக்க வந்தவர்களை... நாயை ஏவி கடிக்க விட்ட கொடூர பெண்... கதிகலங்க வைக்கும் வீடியோ

x

கோவையில் தவணைத் தொகையை வசூலிக்க வந்த ஊழியர்களை நாயை ஏவி கடிக்க விட்ட பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அப்பெண் மிரட்டும் பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது... வெள்ளலூரைச் சேர்ந்த மணிகண்டன்-தர்ஷனா தம்பதி தவணைத் தொகை செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் காரை பறிமுதல் முயன்றனர்... அப்போது மணிகண்டன் திடீரென காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட, தர்ஷனா தன் வளர்ப்பு நாயை ஏவி கடிக்குமாறு கட்டளையிட்டதில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். இவ்விவகாரத்தில் அப்பெண் கைது செய்யப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்தினர் முறையான ஆவணங்களை கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.. இந்த சூழலில் தர்ஷனா நாயைக் காட்டி ஊழியர்களை மிரட்டும் பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்