2024ஆம் ஆண்டின் கடைசி 3 நாள் - முதல்வர் போட்ட பிளான்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 29 முதல் 31 வரை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வரும் 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தூத்துக்குடியில் புதிதாக அமைந்துள்ள டைடல் நியோ பார்கை திறந்து வைக்கிறார். அன்று இரவு தூத்துக்குடியிலேயே தங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், 30ஆம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று, உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர், கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார். 31ஆம் தேதி காலை, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, கன்னியாகுமரியில் நடைபெறும் வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார், அன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார்.