வெளியானது முதல்வர் ஸ்டாலினின் நாளைய பிளான்
வெளியானது முதல்வர் ஸ்டாலினின் நாளைய பிளான்
கோவையில், 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார். கோவை விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில்
தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனைமுதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை திறந்து வைக்க உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
பின்னர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்களிக்கபட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளதாகவும்
தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு தங்கநகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் காந்திபுரத்தில் 133 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அனுப்பர்பாளையம் கிராமத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 தளங்கள் கொண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி விழா பேருரை
ஆற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.