"ஏக்கருக்கு ரூ.30000/- செலவு பண்ணிருக்கோம்.."முதல்வருக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள் | CM Stalin

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதியில் நெற்பயிர்களை யானைக்கொம்பன் நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமரசிம்மேந்திரபுரம், மங்களநாடு, விஜயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெற்சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், நெற்பயிர்கள் கதிர்விடும் நேரத்தில் யானைக்கொம்பன் நோய் தாக்கி பாதிக்கப்பட்டு உள்ளது. மருந்து தெளித்தாலும் பயனில்லை எனக் கூறும் விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்