சொன்ன 2 மணி நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் - இன்ப அதிர்ச்சி உறைந்த மாணவிகள்

x

சிவகங்கை சோழபுரத்தில் கல்லூரி மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியது மாணவிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தங்கள் கல்லூரி முன்பு பேருந்து நின்று செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து

மின்னல் வேகத்தில் அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் என்ற பலகை வைக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி வாயிலில் நின்றபடி போக்குவரத்து துறை அலுவலர், பேருந்துகள் காலையும் மாலையும் நின்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தியதுடன் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். முதல்வர் உத்தரவுக்குப் பிறகு பேருந்துகள் கல்லூரி முன்பு நின்று செல்கின்றன. இதனால் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு மனமாற நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்