சுற்றுலா சென்ற போது நடந்த கொடூரம்...துடிதுடித்து இறந்த பள்ளி குழந்தைகள்

x

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது 12 வயது மகள் வர்ஷாவும், 7 வயது மகன் சர்வேஸூம் குடியரசு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, தங்களது உறவினர்களோடு மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் பயணித்த கார், மைசூர் மாண்டியா பைபாஸ் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வர்ஷாவும் சர்வேஸூம் உயிரிழந்தனர். அவர்களது உறவினர்களான ரமேஷ் மற்றும் கீதா பிரியா ஆகியோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே முடிச்சூரிலுள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட வர்ஷா மற்றும் சர்வேஸீன் உடலுக்கு, உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்த சூழலில் வர்ஷா தந்தை கார்த்திகேயன், கார் ஓட்டுனரே விபத்து காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்