குழந்தை இல்லாததால் விரக்தி, கணவன், மனைவி தற்கொலை

x

குழந்தை இல்லாததால் விரக்தி, கணவன், மனைவி தற்கொலை

வேலூர் அடுத்த பழைய காட்பாடி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மற்றும் அவரின் மனைவி ராஜம்மாள் இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். திருமணம் ஆகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத விரத்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்