கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

x

கரூரில் இளம்பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென குழந்தையுடன் சேர்த்து மண் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பசுபதிபாளையம் போலீசாரிடம் புகாரளித்ததாகவும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்