திருச்செந்தூர் கோவிலில் மாயமான குழந்தை... 3 நாள் நரகம்.. பின் நிகழ்ந்த அதிசயம் - கதறிய தாய்

x

கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் முத்துராஜ் - ரதி தம்பதி... இந்த தம்பதி திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அயராது மேற்கொண்ட விசாரணையில், சேலத்தை சேர்ந்த திலகவதி - பாண்டியன் தம்பதி குழந்தையை கடத்தியது தெரியவந்தது. அந்த தம்பதியை கோவையில் வைத்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவத்தில், கைதான திலகவதி - பாண்டியன் தம்பதியிடம் குழந்தையை கடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, எதிர்பாராத விதமாக, திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்தால், பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தங்களை கைது செய்தால் இருவருமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே, விஷப்பொடியை வாங்கி வைத்திருந்ததாக, உயிரிழந்த திலகவதியின் கணவர் பாண்டியன் போ​லீசாரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது.கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த திலகவதியின் உடலை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் முன்னிலையில், மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில், திலகவதி சயனைடு போன்ற விஷத்தன்மை வாய்ந்த பவுடரை உட்கொண்டது தெரியவந்தது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், காவல்நிலையத்தில் குழந்தையை போலீசார் கொண்டு வந்ததும், என் மகனே என தாய் குழந்தையை தூக்கி ஆரத் தழுவி கண்ணீர் விட்டது, கண்கள் கண்ணீரில் மூழ்கின...நட்பாகவும், பாசமாகவும் பழகினார் என்பதால் தான், திலகவதியுடன் குழந்தையை கொடுத்ததாகவும், குழந்தை மாயமானதால் கதிகலங்கி விட்டேன் எனவும் தாய் ரதி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

"குழந்தையை கடத்திய பெண் நட்பாக பழகினார்"

"குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதற்காக கூட்டிச் சென்றார்"

"நம்பி அனுப்பினேன் - குழந்தையுடன் அந்தப் பெண் மாயமானார்"

ஆபத்தையும் கருதாமல், குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் பட்டபாடு வார்த்தைகளால் கூற முடியாது என்றும், அவர்கள் இல்லையென்றால் குழந்தை உயிருடன் கிடைத்திருக்காது என்றும் அவரது கண்களில் வந்த ஒவ்வொரு கண்ணீர் துளிகளும் போலீசாருக்கு நன்றியை உரித்தாக்கின...

"காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக குழந்தையை தேடினர்"

"ஆபத்தை கருதாமல் எங்களுக்காக உழைத்தனர்"

"போலீஸ் அதிகாரிகள் இல்லையென்றால் குழந்தை இருக்காது"


Next Story

மேலும் செய்திகள்