கோவிலுக்குள் என்ட்ரியான இஸ்லாமியர்கள் சீர்வரிசையோடு வந்து அசத்தல்.நாட்டாமையிடம் ஒப்படைக்கப்பட்ட மாலை
சிதம்பரம் அருகே மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில். இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று வழிபட்டனர். கிள்ளையில் உள்ள காளியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தேங்காய், பழங்கள், மாலை உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று யாகம் நடைபெற்ற இடத்தில் ஊர் நாட்டாமைகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை கிராம மக்கள் சால்வை அணிவித்து வரவேற்று, புனித நீர் உள்ள கலசத்தை வழங்கினர்.
Next Story