கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து பொசுங்கிய நபர் - பார்த்ததுமே அதிர்ந்து போன மக்கள்

x

சிதம்பரம் சின்ன கடை தெருவில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர் மாணிக்கம். வழக்கம் போல் இனிப்பு, கார வகைகள் செய்வதற்காக, சட்டியில் எண்ணெயை கொதிக்க வைத்து கொண்டிருந்த போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு மாணிக்கம் எண்ணெய் சட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணிக்கத்தின் தலை முதல் நெஞ்சு வரை எண்ணெயில் பொசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அருகே இருந்த நபர்கள் கடைக்கு சென்றபோது சத்தம் ஏதும் கேட்காததால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணிக்கம் எண்ணெய் சட்டியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணிக்கத்திற்கு, இரண்டு மகன் ஒரு பெண் உள்ள நிலையில், அதில் ஒரு மகன் சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்