தேரில் எழுந்தருளிய நடராஜருக்கு சீர்வரிசையுடன் படையலிட்ட மீனவர்கள்

x

சிதம்பரம் நடராஜருக்கு மீனவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து பட்டு சார்த்தி வழிபட்டனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நேற்று நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளினர். நான்கு மாட வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தில் உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை கலந்துகொண்டு உற்சாகமடைந்தனர். இதனிடையே, பருவதராஜா குல மீனவர் சங்கத்தினர் நடராஜரை மருமகனாக கருதி மேளதாளங்கள் முழங்க மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று தேரில் எழுந்தருளிய நடராஜருக்கு படையலிட்டனர். இதே போல மீனவர் குலத்தில் பிறந்த மகளாக கருதப்படும் சிவகாமசுந்தரிக்கும் சீர்வரிசை எடுத்துச் சென்று கொடுத்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்