புதுசா கட்டி ஒருஅடி எடுத்து வைக்கல ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு பேரிடி..ஒவ்வொரு அடியிலும் மரண பயம்

x

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றின் மறுபக்கம் அமைந்துள்ளது, ஜெயங்கொண்டபட்டினம் கிராமம்...

இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு பழைய கொள்ளிடம் ஆற்றை கடந்துதான் செல்ல முடியும். கொள்ளிடம் ஆற்றில் எப்போதும் கடல் நீர் மற்றும் வெள்ள நீர் அவ்வப்போது மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் கடந்த ஆட்சி காலத்தில் 50 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆற்று பாலம் அமைக்கப்பட்டது. பிரீத்...

பாலம் தரமான முறையில் அமைக்கப்படாததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்பே பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மாணவர்கள் 12 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பள்ளிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கிராம மக்கள் அதே பகுதியில் மூங்கில் பாலம் அமைத்து அதனை பயன்படுத்தி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் அந்த பாலத்தில் சென்று வரவே பயப்படுகின்றனர்.

உயிரை பணயம் வைத்து, பாதுகாப்பற்ற முறையில் மூங்கில் பாலத்தில் சென்று வருவதாக கூறுகின்றனர், பள்ளி மாணவிகள்...

பாலம் பயன்பாட்டுக்கு வரும் முன்பே சேதம்"

"மூங்கில் பாலத்தில் செல்ல பயமாக உள்ளது"

"இல்லையெனில் 12 கி.மீ. சுற்றி வர வேண்டும்"

குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதற்காக, தங்களால் வேலைக்கு கூட செல்ல முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர், பெற்றோர்...

கரணம் தப்பினால் மரணம் என்பது போல் நாள்தோறும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவல நிலையை தடுக்க புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்