அரசு பஸ்ஸில் சீட்டுடன் வெளியே விழுந்த பெண்.."தலை, கையில ரத்தம் கொட்டுதே இரக்கமே இல்லையா"

x

சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், சீட்டுடன் கீழே விழுந்து படுகாயமடைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே புதுக்குப்பத்தை சேர்ந்த தையல்நாயகி, மீன் விற்பனை செய்வதற்காக சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்தில் சென்றார். பேருந்து புறப்பட்டு சி.புதுப்பேட்டை இந்திரா நகர் பகுதியில் உள்ள வளைவு பகுதியில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து, வெளியே விழுந்த‌து. சீட்டுடன் விழுந்த தையல் நாயகிக்கு, கை எலும்பு முறிந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்