கோயில் குளத்தில் புகுந்த முதலை - பீதியில் மக்கள்

x

சிதம்பரம் அருகே கோவில் குளத்தில் புகுந்த முதலையை

வனத்துறையினர் மீட்டனர். சிதம்பரம் அருகே சி.வக்காராமாரி கிராமத்தின் மாரியம்மன் கோவில் குளத்தில் முதலை ஒன்று புகுந்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் சுமார் 7 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட முதலையை லாவகமாக பிடித்து அதே பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்