தோட்டத்திற்குள் புகுந்த 13 அடி நீள ராட்சத முதலை - பார்த்ததுமே பீதியில் உறைந்த உரிமையாளர்
சிதம்பரம் அருகே வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த 13 அடி நீள முதலை மீட்கப்பட்டது. அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த சம்பந்தமூர்த்தி என்பவர், தனது தோட்டத்தில் ராட்சத முதலை பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், 550 கிலோ எடையுள்ள 13 அடி நீள முதலையை மீட்டு, வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.
Next Story