#BREAKING || பக்தர்கள் வைத்த கோரிக்கை.. சிதம்பரம் தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
"சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது". பொது தீட்சிதர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை - தீட்சிதர்கள் தரப்பு. ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை - தீட்சிதர்கள் தரப்பு. ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு.
Next Story