ரூ.1.5 கோடியை அபேஸ் செய்து ஒன்றுமே தெரியாதது போல் ஆபீஸ் வந்த ஊழியர்... கொடூர ட்ரீட்மெண்ட்
ரூ.1.5 கோடியை அபேஸ் செய்து ஒன்றுமே
தெரியாதது போல் ஆபீஸ் வந்த ஊழியர்
உள்ளேயே வைத்து கொடூர ட்ரீட்மெண்ட்
சென்னையில் ஏடிஎம்மிற்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய் பணம் கையாடல் செய்ததாக ஊழியரை மேலாளர்கள் 4 நாள்கள் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... என்ன நடந்தது?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
கையாடல் செய்த பணத்தைக் கறக்க ஊழியரை ரூமுக்குள் அடைத்து வைத்து "ஸ்பெஷல்" ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளனராம் மேலாளர்கள்...
நடந்தது என்ன?...
சென்னை தி.நகர் கிரியப்பா சாலையில் இயங்கி வரும் இந்தத் தனியார் நிறுவனம் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது...
பணத்தைப் பாதுகாத்து அதற்கான சாவியை வைத்திருக்கும் பொறுப்பாளர் தான் சிக்கலில் சிக்கியுள்ளது...
இந்த நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது ஒன்றரை கோடி ரூபாய் வரை காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது...
நிறுவன அதிகாரிகள் சிசிடிவி கேமராவை ஆட்சி செய்த போது...பொறுப்பாளரே பணத்தைத் திருடியது தெரிய வந்தது வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விட்டது...
இதையறியாத பொறுப்பாளர்...கடந்த 18ம் தேதி பணிக்கு வந்துள்ளார்...
அப்போது நிறுவன மேலாளர்கள் 9 பேரும் சேர்ந்து பொறுப்பாளரைத் தனியே அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது...
மேலும் பொறுப்பாளரை வீட்டுக்கு அழைத்துச் சென்று 35 லட்சம் வரை பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்...''
வங்கி லாக்கரில் இருந்த 85 லட்சம் பணத்தையும்...60 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்...
அந்த நகைகளை பாரிமுனை பகுதியில் உள்ள அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து 30 லட்சத்தை வாங்கியுள்ளனர்...
மேலாளர்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தி.நகர் காவல்துறை துணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது...
இதையடுத்து பாண்டிஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலாளர்கள் கைகளில் சிக்கியவரை மீட்டுள்ளனர்...
மேலும் மேலாளர்களைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்...