சென்னையை சுற்றி 4 மாவட்டங்களை புரட்டி எடுத்த திடீர் சுழற்சி - பாதி அளவு மூழ்கிய கோயில்

x

வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது..

சென்னை அசோக் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதிகபட்சமாக கொளத்தூரில் 9 சென்டிமீட்டர் மழையும், நெற்குன்றத்தில் 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இரவு முதல் மழை பெய்து வந்தாலும் எந்த ஒரு சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்தனர். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர், பெருங்களத்தூர், சேலையூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 391.60 மில்லி மீட்டர் மழை மொத்தமாக பதிவாகியுள்ளது. பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது... பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தபடி கல்லூரிகளுக்கு சென்றனர். செங்கல்பட்டு திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், எளாவூர், பாதிரிவேடு மற்றும் மாதர்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது... திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் காலையிலேயே கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்ற தனியார் கல்வி நிறுவன பேருந்துகள், மாணவர்களை ஏற்றாமல் திரும்பிச் சென்றன.


Next Story

மேலும் செய்திகள்