நள்ளிரவில் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை - வாகன ஓட்டிகள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி,சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென இரவில் கனமழை பெய்தது. அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை மற்றும் புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், ஆவடி, திருமுல்லைவாயல், அயப்பாக்கம்,பட்டாபிராம் திருநின்றவூர், முத்தா புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சி.டி.எச் சாலை மட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி குளம் போல தேங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story