அடுத்த 2 நாட்கள் எங்கெங்கு கனமழை பெய்யும்? - சூழ்ந்த மேகங்கள்.. கடலில் காட்டும் அறிகுறி

x

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூரில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்...

நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூரில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, திருவள்ளூரில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்