மரண பீதியாக்கிய திடீர் சுழற்சி..துடைத்தெறியப்பட்ட கடைகள்..சென்னையில் சுவடே இல்லாமல்..
- கன மழை எச்சரிக்கையை அடுத்து, சூப்பர் மார்க்கெட்டிலும், மளிகை கடைகளிலும் மக்கள் குவிந்து வருவது சென்னையை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...கடந்த வருட மழை ஏற்படுத்திய தாக்கத்தையும், மிக்ஜாம் ஆடிய கோரத் தாண்டவத்தையும் சென்னை வாசிகள் மறக்கவில்லை என்பதே இதற்கு உதாரணம்...சென்னையில் அதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த அடுத்த கணமே, முன்னெச்சரிக்கையாக சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மளிகை கடைகளிலும் குவிந்து தங்களுக்கான அத்தியாவாசிய பொருள்களை வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர்..பால், மெழுகுவர்த்தி, பிஸ்கட், பிரட், போன்றவைகளே அனைவரது கூடைகளிலும் கைகளிலும் நிரம்பி வழிகிறது..கனமழை பெய்யும் பட்சத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட வாய்ப்பிருக்கும் நிலையிலே இந்த தீவிர முன்னெச்சரிக்கை..அதேபோல தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கும் சூழலில் மக்கள் அலர்ட்டாகி கொண்டிருக்கின்றனர்...கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு மட்டுமல்ல.... மக்களும் பருவமழையை எதிர்கொள்ள இம்முறை முனைப்புடன் தயாராகிவிட்டனர். வந்தபின் காப்பதைக் காட்டிலும் வருமுன் காத்துக்கொள்வதே சிறந்தது..
Next Story