அன்று பார்த்த அந்த இடமா இது... நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை மக்கள்

x

அன்று பார்த்த அந்த இடமா இது... நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை மக்கள்

சென்னை பட்டாளம் பகுதியில் 2 நாட்களாக தேங்கியிருந்த மழைநீர் வடிந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால், பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் தெரு, ஸ்டாரான்ஸ் சாலை, டிமல்லாஸ் சாலை ஆகிய பகுதிகளில் இடுப்பளவு மழை நீர் தேங்கியது.

அங்குள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 2 நாட்களாக மழை நீர் வடியாமல் இருந்த நிலையில், நேற்று காலை முதலே 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 லாரிகளில் மழைநீர் உறிஞ்சப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்