Chennai News | பெண்ணை ஆக்ரோஷமாக தள்ளிவிட்ட அதிகாரி
சென்னை புது வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில், பெண் வியாபாரியை வார்டு மாநகராட்சி அதிகாரி தள்ளிவிட்டதாக கூறி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோர கடைகளை சோதனை செய்ய சென்ற அதிகாரி, கடையின் வாசல் முன் இருந்த காய்கறிகளை பெண் வியாபாரி உள்ளே எடுத்து வைத்ததை பார்த்து அவரை இழுத்துள்ளார். இதனை பார்த்த சக வியாபாரிகள் அதிகாரியை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
Next Story