சென்னையில் 5 பேருக்கு உயிர் கொடுத்த இளைஞர்.. கதறிய தாய்.. மனமுடைந்து பேசிய தந்தை

x

சென்னை சென்ட்ரல் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 20வயது இளைஞர், விபத்தில் சிக்கி, சென்ட்ரல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த நரம்பியல் மருத்துவர்கள், இளைஞர் மூளை சாவடைந்ததை உறுதிப்படுத்தினர். இதனை தொடந்து, அவரது குடும்பத்தினர் இளைஞரின் உடல் உறுப்புகனை தானமாக கொடுத்தனர். இதன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளைஞரின் உடலுக்கு,சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணிராஜன், மருத்துவர்கள், செவிலியர்கள் மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்