சென்னை எழும்பூர் - கடற்கரை - முக்கிய மாற்றம்.. வெளியான தகவல்

x

சென்னை கடற்கரை எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4 வது வழித்தடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து வட மாநிலம் செல்லும் ரயில்களை அதிகப்படுத்தும் வகையில் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4.3 கிலோமீட்டர் தொலைவிற்கு 279 கோடியில் நான்காவது புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்த நிலையில் நான்காவது வழித்தடத்தை பயன்படுத்த ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்