``ஆட்சிக்கு தான் அவப்பெயர்.. எனக்கு தூ*கு தண்டனை தாங்க’’ - புலம்பி தள்ளிய சென்னை கவுன்சிலர்
பெருநகர சென்னை மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு நெய்தல் நகர் பகுதியில் மழை பெய்யும் போது சாலை பணி நடந்ததாக தெரிகிறது. தகவலின் அறிந்து விரைந்து வந்த மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் மழை பெய்து வரும் நிலையில் எதற்காக சாலை அமைக்கும் பணியை செய்தீர்கள் என மாநகராட்சி உதவி பொறியாளரிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம் மழை நேரத்தில் போடப்பட்ட சாலைகள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்யுங்கள் எனவும் தரமாக இருந்தால் தனக்கு தூக்கு தண்டனை கூட கொடுங்கள் எனவும் ஆவேசப்பட்டார்.
Next Story