சென்னையில் ரூ.14 கோடி அபராதம் வசூல் - ஓனர்களுக்கு கிடைத்த ஷாக் செய்தி
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து 14 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் மாட்டின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 2வது முறை பிடிபட்டால் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.அந்த வகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஆண்டு மொத்தம் 2 ஆயிரத்து 427 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து 1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.ஒட்டுமொத்தமாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து 14 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அபராத தொகை உயர்த்தப்பட்டதால் சாலையில் திரியும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.