#BREAKING | டேக் ஆஃப் ஆக சில நொடி..148 பயணிகளுடன் `ரன் வே’யில் நின்ற விமானம்..- சென்னையில் பரபரப்பு

x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் காலை 10.30 மணிக்கு, 148 பயணிகளுடன் நடைமேடையில் இருந்து புறப்பட்டு ஓடுபாதை நோக்கி சென்றது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதை அடுத்து விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பது உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தை நடைமேடை அருகே அவசரமாக நிறுத்தினார்.

அதன் பின் இழுவை வண்டிகள் வந்து நிறுத்தப்பட்ட விமானத்தை நடைமேடை அருகே நிறுத்தப்பட்டது. விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமானத்திலிருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விமான பொறியாளர்கள் குழு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானம் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் அதே விமானமோ அல்லது வேறு விமானம் மூலமாகவோ பயணிகள் அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்