தளர்ந்த வயதில் ஆசை.. சித்த வைத்திக்கே `லேகியம்’ கொடுத்த `குத்துவிளக்கு’..

x

மறுமணம் செய்துகொள்ள விளம்பரம் கொடுக்கும் முதியவர்களை குறிவைத்து மோசடி செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்த 63 வயது சித்த வைத்தியர் ஒருவர், மறுமணம் செய்து கொள்ள செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்த நிலையில், சென்னையை சேர்ந்த கீதா என்பவர் அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார். இந்நிலையில், சென்னை வந்த சித்த வைத்தியரை உடனடியாக திருமணம் செய்ய வேண்டுமென கூறி, நகை, ஆடை உள்ளிட்டவற்றை அந்த பெண் வாங்கியதுடன், தனது உறவினரை பார்ப்பதாக கூறி நகைகளுடன் மாயமாகியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளித்த நிலையில், மோசடி செய்த பெண்ணை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்